Images
  • paragames shuttler
    (படம்: Singapore National  Olympic Council)

காலில் சுளுக்கு, மனத்தில் உறுதி-அரையிறுதிக்குச் செல்லும் சிங்கப்பூர் வீராங்கனை

காலில் சுளுக்கு. தாங்கமுடியாத வலி.

அனைத்தையும் சமாளித்து பேட்மிண்டன் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார் சிங்கப்பூரின் ஜெஸ்லின் ஹூய் (Jaslyn Hooi).

அர்ஜெண்டினாவின் போனஸ் அயர்ஸ் நகரத்தில் நடைபெறும் இளையர் ஒலிம்பிக் விளையாட்டுகளின் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டிகளின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தின்போது ஜெஸ்லினின் காலில் சுளுக்கு ஏற்பட்டது.

சுமார் 5 வினாடிகளுக்கு வலியில் துடித்தவாறு ஜெஸ்லின் தரையில் கிடந்தார்.

பின்னர் வலியைச் சமாளித்து அந்த 18 வயது வீராங்கனை அமெரிக்க விளையாட்டாளரை 2-0 என்ற கணக்கில் வென்றார்.

அரையிறுதிச் சுற்றில் சீனாவின் வாங் சி யியை (Wang Zhi Yi) சந்திக்கவுள்ள ஜெஸ்லின் சிங்கப்பூருக்குத் தங்கத்தை வெல்லும் வாய்ப்புண்டு. 

Top