Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சட்டவிரோத இணைய ஒளிபரப்புக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை - பிரிமியர் லீக் வழக்கறிஞர் எச்சரிக்கை

பிரிமியர் லீக் ஆட்டங்களைச் சட்டவிரோதமாக இணையத்தில் ஒளிபரப்புவோருக்கு எதிராக விரைவில் கூடுதல் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சட்டவிரோத இணைய ஒளிபரப்புக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை - பிரிமியர் லீக் வழக்கறிஞர் எச்சரிக்கை

(படம்: Screengrab from Manchester City/YouTube)

பிரிமியர் லீக் ஆட்டங்களைச் சட்டவிரோதமாக இணையத்தில் ஒளிபரப்புவோருக்கு எதிராக விரைவில் கூடுதல் நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரிமியர் லீகின் சட்டச் சேவைப் பிரிவு இயக்குநர் கெவின் பிளம்ப், சேனல் நியூஸ்ஏஷியாவுக்கு அளித்த பேட்டியில் அதனைத் தெரிவித்தார்.

பிரிமியர் லீக் அதன் முதல் அனைத்துலக அலுவலகத்தை அண்மையில் சிங்கப்பூரில் திறந்தது.

அதனைத் தொடர்ந்து தென் கிழக்காசிய வட்டாரத்தில் அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று திரு. பிளம்ப் தெரிவித்தார்.

இவ்வட்டாரத்தில் அலுவலகத்தைக் கொண்டிருப்பது அதற்கு உதவும் என்றார் அவர்.

பிரிமியர் லீகின் உள்ளடக்கத்திற்கான உரிமைகளை அத்துமீறுவோர் மீது அண்மைக் காலமாகக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் திரு. பிளம்ப் குறிப்பிட்டார்.

ஆனால் பெரும்பாலும் பிரிட்டனிலேயே அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இங்கு அதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் தொடர்பில் சிங்டெல் நிறுவனத்துடன் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக பிரிமியர் லீகின் சட்டச் சேவைப் பிரிவு இயக்குநர் தெரிவித்தார்.

அடுத்த 3 பருவங்களுக்கு பிரிமியர் லீக் உரிமைகளைப் பெற்றுள்ளதாகக் கடந்த நவம்பர் மாதம் சிங்டெல் அறிவித்தது.

12 ஆண்டுகளுக்குச் சிங்கப்பூரில் பிரிமியர் லீகின் அதிகாரத்துவ ஒளிபரப்பு நிறுவனமாகவும் அது திகழும்.

உள்ளூரில் அலுவலகம் இருப்பதால் சட்டவிரோத ஒளிபரப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவை மேற்கொள்ளப்படும் தளங்கள் பற்றியும் தகவல் பெறுவது மேலும் சுலபமாக இருக்கும் என்று திரு பிளம்ப் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்