Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிரான்ஸ்: வன்முறையில் ஈடுபட்ட சுமார் 150 PSG காற்பந்து அணி ரசிகர்கள் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்  காவல்துறையுடன் மோதிய பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் காற்பந்து அணியின் ரசிகர்கள் சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
பிரான்ஸ்: வன்முறையில் ஈடுபட்ட சுமார் 150 PSG காற்பந்து அணி ரசிகர்கள் கைது

(படம்: AFP/Alain JOCARD)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல்துறையுடன் மோதிய பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் காற்பந்து அணியின் ரசிகர்கள் சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாகனங்களுக்குத் தீ வைத்துக் கொளுத்திய அவர்கள் கடைகளின் ஜன்னல்களையும் உடைத்தனர்.

போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில்(Lisbon) இன்று காலை நடைபெற்ற UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் பயர்ன் மியுனிக் அணியுடன் பொருதிய பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் தோல்வி அடைந்தது.

அதை அடுத்து, பாரிஸின் Parc des Princes அரங்கத்தில் கூடியிருந்த அதன் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

சில மணி நேரம் நீடித்த அந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ரசிகர்கள் சிலர் காவல்துறையினர் மீது போத்தல்களையும் பட்டாசுகளையும் வீசி எறிந்தனர்.

அதனால் அதிகாரிகள் கண்ணீர்ப் புகையுடன் ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்த நேரிட்டது.

சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் 16 பேர் காயமடைந்ததாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் கூறினார்.

ஆர்ப்பாடங்களின்போது, 12 கடைகள் தாக்கப்பட்டன. சுமார் 15 வாகனங்கள் சேதமடைந்தன.

அதுகுறித்துக் கண்டனம் தெரிவித்த அமைச்சர், அது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று தமது Twitter பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

வன்செயலில் ஈடுபட்டோரைக் கைது செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் நன்றி கூறினார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்