Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

போட்டியைவிட்டு வெளியேறினாலும் ரஷ்ய விளையாட்டாளர்கள் சாதனையாளர்களே' : புட்டின்

அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புத்தின் சாதனையாளர்கள் என்று பாராட்டினார்.

வாசிப்புநேரம் -
போட்டியைவிட்டு வெளியேறினாலும் ரஷ்ய விளையாட்டாளர்கள் சாதனையாளர்களே' : புட்டின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். படம்: AFP/Michael Klimentyev

ரஷ்யா குரோஷியா அணியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, உலகக் கிண்ணக் காற்பந்தாட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.

இருப்பினும், ரஷ்ய அணியின் சாதனைகளை, அந்நாட்டுக் காற்பந்து ரசிகர்கள் அதிக அளவில் பாராட்டி வருகின்றனர்.

குரோஷியாவுடனான ஆட்டத்தில் சமநிலை கண்டு, பின்னர் பெனால்டி வாய்ப்பில், ஒரு கோல் வித்தியாசத்தில் ரஷ்ய அணி தோல்வியடைந்தது.

அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புட்டின் 'ரஷ்ய  விளையாட்டாளர்கள் சாதனையாளர்களே' என்று பாராட்டினார்.

உலகக் கிண்ணத்தில் ஜாம்பவான்களாகக் கருதப்பட்டு வரும் ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின் ஆகிய  அணிகளைக் காட்டிலும், ரஷ்யா சிறப்பாக விளையாடியதை அவர் சுட்டினார்.

அடுத்து வரும் அரையிறுதிச் சுற்றுகளில், குரோஷியா, இங்கிலாந்து அணியுடனும், பிரான்ஸ், பெல்ஜியம் அணியுடனும்  மோதவிருக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்