Images
  • Sindhu
    படம்: AFP

உலக பேட்மிண்ட்டன் விருதுப் போட்டி : இந்தியாவின் P.V. சிந்து தங்கம் வென்றார்

உலக பேட்மிண்ட்டன் விருதுப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதியாட்டத்தில் இந்தியாவின் P.V. சிந்து, ஜப்பானின் நொஸோமி ஒக்குஹாராவை (Nozomi Okuhara) வீழ்த்தித் தங்கம் வென்றார்.

அதன்மூலம் உலக பேட்மிண்ட்டன் விருதுப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றார்.

ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-7, 21-7 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை எளிதாக வென்றார்.

உலக பேட்மிண்ட்டன் தரவரிசையில் 5ஆம் இடத்தில் உள்ளார் 24 வயது சிந்து.

இந்த ஆண்டு உலக பேட்மிண்ட்டன் விருதுப் போட்டி சுவிட்ஸர்லந்தின் பேசல் நகரில் நடைபெற்றது.
    

Top