Images
  • emma raducanu
    (படம்: Robert Deutsch-USA TODAY Sports)

US Open டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுக்கானு எதிர்பாரா வெற்றி

அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியில், பிரிட்டனின் 18 வயது எம்மா ரடுக்கானு (Emma Raducanu), கனடாவின் லேலா பெர்னாண்டஸை (Leylah Fernandez) வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

செட் விவரம்: 6-4, 6-3

அமெரிக்கப் பொது விருது வரலாற்றில், நேரடியாகத் தகுதி பெறாமல், தகுதிச் சுற்றுகளில் வென்று கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமை ரடுகானுவைச் சேர்கிறது.

1977க்குப் பிறகு, பெரிய அளவிலான டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற முதல் பிரிட்டிஷ் வீராங்கனையும் அவரே.

1977இல், விர்ஜீனியா வேட் (Virginia Wade) விம்பிள்டன் (Wimbledon) போட்டியில் வெற்றி பெற்றார்.

இம்முறை அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் இறுதிச் சுற்றில் பொருதிய இருவருமே unseeded எனும் அதிகம் எதிர்பார்க்கப்படாத போட்டியாளர்கள்.

டென்னிஸ் உலகத் தர வரிசையில் ரடுக்கானு 150ஆவது நிலையிலும், பெர்னாண்டஸ் 73ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

-Reuters 

Top