Images
  • Euro
    படம்: REUTERS/Denis Balibouse

யூரோ 2020 - சாதனை அளவில் நுழைவுச்சீட்டுகளுக்குப் பதிவு

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

'யூரோ 2020' காற்பந்துப் போட்டிகளுக்காக 14 மில்லியனுக்கும் அதிகமான நுழைவுச்சீட்டுகளுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அது சாதனை அளவு என்று UEFA எனும் ஐரோப்பியக் காற்பந்துச் சங்கம் தெரிவித்துள்ளது.

விற்பனை தொடங்கிய முதல் மூன்று வாரங்களில் நுழைவுச்சீட்டுகளுக்கான பதிவு 14 மில்லியனைத் தாண்டியது. 

முதற்கட்ட விற்பனை கடந்த மாதம் 12ஆம் தேதி ஆரம்பித்தது.

1.5 மில்லியன் நுழைவுச்சீட்டுகள் அப்போது விற்பனைக்கு விடப்பட்டன.

'யூரோ 2020' காற்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு நடைபெறும்.

முதல்முறையாக ஐரோப்பாவின் 12 நகர்களில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.



Top