Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரின் முகம் கொண்ட சிறப்பு நாணயம்

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரரின் முகம் கொண்ட சிறப்பு நாணயங்களை சுவிட்ஸர்லந்து அடுத்த மாதம் வெளியிடவுள்ளது.

வாசிப்புநேரம் -
டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரின் முகம் கொண்ட சிறப்பு நாணயம்

(படம்: REUTERS/Edgard Garrido)

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரரின் முகம் கொண்ட சிறப்பு நாணயங்களை சுவிட்ஸர்லந்து அடுத்த மாதம் வெளியிடவுள்ளது.

அந்நாட்டில் தற்போது உயிருடன் இருக்கும் ஒருவரின் முகம் பதிக்கப்படுவது இதுவே முதன்முறை. 20 ஃபிராங்க் மதிப்பிலான 55,000 சிறப்பு வெள்ளி நாணயங்கள் வெளியிடப்படுவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

38 வயது ஃபெடரர், 20 முறை Grand Slam கிண்ணத்தை வென்றுள்ளார்.

இன்று முதல் இம்மாதம் 19ஆம் தேதி வரை நாணயங்களுக்கு மக்கள் முன்பதிவு செய்யலாம்.

தேவை ஏற்பட்டால் மே மாதத்தில் கூடுதலாக 40,000 நாணயங்கள் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஃபெடரரின் முகம் கொண்ட 50 ஃபிராங்க் தங்க நாணயமும் வெளியிடப்படும்.

இத்தகைய அங்கீகாரத்துக்குத் தம் நன்றியைத் தெரிவிப்பதாக Twitter பக்கத்தில் கூறினார் ஃபெடரர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்