Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வந்துட்டேன்.... நான் திரும்ப வந்துட்டேன் - பிடித்த எண்ணுடன் களமிறங்கும் ரொனால்டோ

வந்துட்டேன்.... நான் திரும்ப வந்துட்டேன் - பிடித்த எண்ணுடன் களமிறங்கும் ரொனால்டோ 

வாசிப்புநேரம் -

உலகப் புகழ்பெற்ற காற்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ரொனால்டோவிற்குரிய 7ஆம் எண்ணை மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) காற்பந்து அணி அவருக்கு வழங்கியுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர் ரொனால்டோ மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியில் இணைந்தார்.

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளில் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அடியெடுத்து வைக்கும் ரொனால்டோவுக்கு எந்த எண் வழங்கப்படும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.

மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியில் 7ஆம் எண் முன்கள ஆட்டக்காரர் எடிசன் கவானிக்கு (Edinson Cavani) கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது அது ரொனால்டோவுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியில் 7ஆம் எண் என்பது நட்சத்திர அடையாளமாகக் கருதப்படுகிறது.

முன்னர், டேவிட் பெக்கம், ஜார்ஜ் பெஸ்ட், பிரையன் ராப்சன் போன்ற மாபெரும் நட்சத்திர வீரர்கள் அந்த எண்ணை அணிந்துள்ளனர்.

"இது நடக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு 7ஆம் எண்னை விட்டுக்கொடுத்த எடிசன் கவானிக்கு (Edinson Cavani) மிக்க நன்றி" என்று ரொனால்டோ தெரிவித்தார்.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்