Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சிறந்த விளையாட்டு வீரர் விருதை இன்னும் கூடுதலாகப் பெறுவதற்குத் தமக்குத் தகுதி உள்ளது - ரொனால்டோ

பிரபலக் காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியைவிட (Lionel Messi), சிறந்த வீரர் என்ற விருதை இன்னும் கூடுதலாகப் பெறுவதற்குத் தமக்குத் தகுதி இருப்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
சிறந்த விளையாட்டு வீரர் விருதை இன்னும் கூடுதலாகப் பெறுவதற்குத் தமக்குத் தகுதி உள்ளது - ரொனால்டோ

(படம்: REUTERS/Ints Kalnins)

பிரபலக் காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியைவிட (Lionel Messi), சிறந்த வீரர் என்ற விருதை இன்னும் கூடுதலாகப் பெறுவதற்குத் தமக்குத் தகுதி இருப்பதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கூறியுள்ளார்.

காற்பந்து ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் அதைச் செய்யவேண்டும் என்றும், காற்பந்து துறையில் எப்போதும் தாம் தனித்துவமானவராக இருக்க வேண்டும் என்றும் ரொனால்டோ கூறினார்.

மெஸ்ஸி சிறந்த விளையாட்டாளர் என்றும், ஆனால் அவரை விடக் கூடுதலாக 8 Ballon d'Or விருதுகளையாவது தாம் வெல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெஸ்ஸியுடன் தமக்கு அதிகத் தொடர்பு இல்லை, என்றாலும், அவருடைய சாதனைகள் தம்மை மேலும் அதிகமாக உழைக்க வைத்ததாக ரொனால்டோ கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்