Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

100 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தின் கீழ் யுவெண்டஸ் குழுவிற்குச் செல்லும் ரொனால்டோ

பிரபலக் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 100 மில்லியன் யூரோ (கிட்டத்தட்ட $160 மில்லியன்) ஒப்பந்தத்தின் கீழ் ரியால் மாட்ரிட் (Real Madrid) குழுவிலிருந்து வெளியேறி இத்தாலியின் யுவெண்டஸ் (Juventus) குழுவில் சேரவுள்ளார். 

வாசிப்புநேரம் -
100 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தின் கீழ் யுவெண்டஸ் குழுவிற்குச் செல்லும் ரொனால்டோ

(படம்: AFP/Francisco Leong)

பிரபலக் காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 100 மில்லியன் யூரோ (கிட்டத்தட்ட $160 மில்லியன்) ஒப்பந்தத்தின் கீழ் ரியால் மாட்ரிட் (Real Madrid) குழுவிலிருந்து வெளியேறி இத்தாலியின் யுவெண்டஸ் (Juventus) குழுவில் சேரவுள்ளார்.

மாற்றத்தைக் குறித்துக் கருத்துரைத்த அவர் தமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான காலம் வந்துவிட்டதாகக் கூறினார்.

ரொனால்டோ தன்னுடன் 4 ஆண்டு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் அதற்கான கட்டணத்தை அடுத்த ஈராண்டுகளுக்குச் செலுத்த உள்ளதாகவும் யுவெண்டஸ் உறுதிசெய்துள்ளது.

ஒப்பந்தத்தின் கீழ் ரொனால்டோ ஒவ்வொரு காற்பந்துப் பருவத்திற்கும் 30 மில்லியன் யூரோ (கிட்டத்தட்ட $480 மில்லியன்) சம்பளம் பெறுவார் என்றும் ஸ்பானிய ஊடகங்கள் கூறுகின்றன.

ரொனால்டோவிற்கு விடையளிக்குமாறு அவருக்கு நன்றி தெரிவித்து ரியால் மாட்ரிட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரியால் மாட்ரிட்டுடன் செலவழித்த நாட்கள் தம் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியானவை என்று குறிப்பிடும் ரொனால்டோவின் கடிதத்தை குழு அதன் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

யுவெண்டஸைப் பிரதிநிதித்து ரொனால்டோ அடுத்த மாதம் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30 வயதுக்கு மேற்பட்ட ஆட்டக்காரர் ஒருவருக்குச் செலுத்தப்பட்டுள்ள ஆக அதிகத் தொகை ரொனால்டோவிற்குச் செலுத்தப்படும் 100 மில்லியன் யூரோ ஆகும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்