Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

35 வயதிலும் சாகசம் செய்யும் காற்பந்து நட்சத்திரம் ரொனால்டோ

இத்தாலியில் நடந்துவரும் Serie A போட்டியில் நடந்த சம்பவத்தை இணையவாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
35 வயதிலும் சாகசம் செய்யும் காற்பந்து நட்சத்திரம் ரொனால்டோ

(படம்: Instagram/ Cristiano)

இத்தாலியில் நடந்துவரும் Serie A போட்டியில் நடந்த சம்பவத்தை இணையவாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.

அதற்கு காரணம்... கிறிஸ்டியானோ ரொனால்டோ...

நேற்று முன்தினம் ரொனால்டோவின் யுவெண்ட்டஸ் அணியும், சாம்டோரியா (Sampdoria) அணியும் மோதின.

அந்த ஆட்டத்தில் யுவெண்ட்டஸ் 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த கோல் தனித்துவம் வாய்ந்தது.

View this post on Instagram

✈️

A post shared by Cristiano Ronaldo (@cristiano) on

தரையில் இருந்து சுமார் இரண்டரை மீட்டர் (2.56 மீட்டர்) குதித்துப் பந்தைத் தலையால் முட்டி கோலைப் புகுத்தினார் ரொனால்டோ.

காற்றில் சிறிது நேரம் நின்றது போலும் இருந்தது.

அந்தக் காணொளி இதுவரை சுமார் 19.5 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

35 வயதிலும் பதின்மவயது போட்டியாளர் போல் துடிப்புடன் ரொனால்டோ இருப்பதையும் இணையவாசிகள் புகழ்ந்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த கோல் தொடர்பாக பல Meme-கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்