Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ரொனால்டோவால் 40 வயது வரை காற்பந்து விளையாட முடியும் என்று கூறும் ரூனி

Manchester United அணியில் மீண்டும் சேர்ந்துள்ள பிரபலக் காற்பந்தாட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 40 வயது வரை விளையாட முடியும் என்று இன்னொரு புகழ்பெற்ற காற்பந்தாட்டக்காரர் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

அவ்வாறு சொன்னவர் வேன் ரூனி (Wayne Rooney). ரூனி, முன்பு Manchester United அணியின் கேப்டன் பொறுப்பை வகித்தவர்.

ரொனால்டோவிற்கு 36 வயதாகிறது. அவர் இதற்கு முன், 2003ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை ஆறு பருவங்களுக்கு Manchester United அணியைப் பிரதிநிதித்தார்.

அந்த அணி, மொத்தம் எட்டு முக்கிய விருதுகைள வெல்ல முக்கியப் பங்காற்றியவர் ரொனால்டோ. கடந்த மாதம், அவர் மீண்டும் Manchester United அணியில் சேர்ந்தார்.

கடைசியாக 12 ஆண்டுகளுக்கு முன், ரொனால்டோ பிரிமியர் லீகில் விளையாடினார்.

இப்போதும் அதில் விளையாடுவதற்கான உடலுறுதி அவரிடம் இருப்பதாக ரூனி, ரொனால்டோவைப் பற்றிக் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்