Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் குழுவுக்கு மாதவிடாய்ப் பொருள் விற்கும் நிறுவனம் ஆதரவளிக்கிறது

இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் குழுவுக்கு மாதவிடாய்ப் பொருள் விற்கும் நிறுவனம் ஆதரவளிக்கிறது

வாசிப்புநேரம் -
இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் குழுவுக்கு மாதவிடாய்ப் பொருள் விற்கும் நிறுவனம் ஆதரவளிக்கிறது

படம்: Rajasthan Royals/Twitter

இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் குழு ஒன்றுக்கு, மாதவிடாய்ப் பொருள் விற்கும் நிறுவனமான 'நைன்' (Niine) ஆதரவளிக்கிறது.

'தி ராஜஸ்தான் ராயல்ஸ்' குழு, நைனின் ஆதரவின் மூலம், மாதவிடாய் பற்றிய இந்தியச் சமூகத்தின் கண்ணோட்டத்தைக் குறிப்பாக ஆண்களின் எண்ணத்தை மாற்றுவதற்கு நம்பிக்கை கொண்டுள்ளது.

மாதவிடாய்க்காலத்தில் உள்ள பெண்கள் இந்தியாவில் பல்வேறு சமூகத் தடைகளை எதிர்நோக்குகின்றனர்.

சில கிராமப்புறங்களில் அவர்கள் வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்; தனியே தூங்கவேண்டிய கட்டாயம் உள்ளது. கோவில்களுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடும் இருக்கிறது.

நைன் நிறுவனத்தின் சின்னம் கிரிக்கெட் விளையாட்டாளர்களின் சட்டையில் பதிக்கப்பட்டிருக்கும்.

அடுத்த மாதம் 19ஆம் தேதி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இடம்பெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் குழு கலந்துகொள்ளும்.

"இந்திய மக்களுக்குக் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் பிடிக்கும். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி சுகாதார, சமூக மாற்றங்களை உண்டாக்கும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்துள்ளது" என்றது ராஜஸ்தான் ராயல்ஸ் குழு.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்