Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ரஷ்யா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் 4 ஆண்டுக்குப் பங்கேற்க முடியாமல் போகலாம்

ரஷ்யா, அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படவேண்டும் என்று ஊக்க மருந்துக்கு எதிரான அனைத்துலக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
ரஷ்யா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் 4 ஆண்டுக்குப் பங்கேற்க முடியாமல் போகலாம்

(படம்: AFP/Irek Dorozanski)

ரஷ்யா, அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்படவேண்டும் என்று ஊக்க மருந்துக்கு எதிரான அனைத்துலக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஊக்க மருந்துக்கு எதிரான விதிமுறைகளை ரஷ்ய அமைப்பு பின்பற்றவில்லை என்பதற்காக ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.

அடுத்த மாதம் 9ஆம் தேதி பாரிஸில் நடக்கும் கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிரான தடை குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ரஷ்யா மீது தடைவிதிக்கப்பட்டால் அடுத்த ஆண்டு தோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அது கலந்துகொள்ள முடியாது.

2020ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் யூரோ காற்பந்துப் போட்டிகளிலும் ரஷ்யா விளையாட முடியாமல் போகலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்