Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ரஷ்ய ஒலிம்பிக் வெற்றியாளர் ஊக்க மருந்து எடுத்ததாகச் சந்தேகம்

அவரது இரத்த-மாதிரியில், தடை செய்யப்பட்ட மெல்டோனியம் எனும் ரசாயனம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
ரஷ்ய ஒலிம்பிக் வெற்றியாளர் ஊக்க மருந்து எடுத்ததாகச் சந்தேகம்

(படம்:Jeff Swinger-USA TODAY Sports)

ரஷ்ய ஒலிம்பிக் வெற்றியாளர், ஊக்க மருந்து எடுத்த சந்தேகத்தின் காரணமாக, பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

அலெக்ஸண்டர் க்குருஷெல் நிட்ஸ்கீ, "curling" போட்டியில் கலந்துகொள்ளத் தென் கொரியா சென்றார்.

ஆனால் அவரது இரத்த-மாதிரியில், தடை செய்யப்பட்ட மெல்டோனியம் எனும் ரசாயனம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இன்று பின்னேரம் இரத்தப் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும்.

கலப்பு இரட்டையர் பிரிவில் க்குருஷெல் நிட்ஸ்கீயும், அவரது மனைவியும் பியோங்சாங்கில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

அவர் ஊக்க மருந்து எடுத்தது நிரூபிக்கப்பட்டால், அது மிகுந்த ஏமாற்றமளிக்கும் தகவலாக இருக்கும் என்று ரஷ்ய ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

ரஷ்ய விளையாட்டாளர்கள் 168 பேர், ஊக்க மருந்து எடுக்கவில்லை என உறுதிசெய்யப்பட்டு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்