Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

வெற்றிக் கதைகள் - 'வயதாகிவிட்டது, இவரால் முடியாது' -சொன்னவர்கள் முன்னால் தங்கம் வாங்கிக் காட்டிய ரூத் பெய்ட்டியா

வெற்றிக் கதைகள் - 'வயதாகிவிட்டது, இவரால் முடியாது' -சொன்னவர்கள் முன்னால் தங்கம் வாங்கிக் காட்டிய ரூத் பெய்ட்டியா

வாசிப்புநேரம் -

தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன.

COVID-19 நோய்ப்பரவலால் துவண்டு போகாமல் இருக்க சில விளையாட்டு நட்சத்திரங்களின் வெற்றிக் கதைகளை வெளியிட்டு வருகிறது Olympics இன்ஸ்டாகிராம் பக்கம்.

அவை இங்கு "செய்தி" ரசிகர்களுக்காக.....

ரூத் பெய்ட்டியா (Ruth Beitia)

விளையாட்டு: உயரம் தாண்டுதல்

நாடு: ஸ்பெயின்

வயது : 42

  • '35 வயதுக்கு மேற்பட்டவர்கள் விளையாட்டில் சாதிக்க முடியாது.... குறிப்பாக உயரம் தாண்டுதலில் இளையர்களுக்கு தான் வாய்ப்பு அதிகம்' - இப்படிக் கூறியவர்களை விக்கித்துப் போக வைத்தவர் ரூத் பெய்ட்டியா.
  • 1992 ஆம் ஆண்டு பார்சலோனாவில்
  • நடந்த ஒலிம்பிக் போட்டியைப் பார்த்த சிறுமி பெய்ட்டியாவுக்கு விளையாட்டில் ஆர்வம் வந்தது.

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • கடினமான பயிற்சியை மேற்கொள்ள காலணிகளுடன் களத்தில் இறங்கினார்.
  • 1998 ஆண்டு உள்ளூர் அளவில் சாதனைகளைத் தகர்த்தார்.
  • 2002ஆம் ஆண்டு அனைத்துலக அளவிலான போட்டிகளில் பங்கேற்றார்.
  • 2004 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால் 16ஆவது இடத்தில் தான் முடிக்க முடிந்தது.

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • 2008 ஒலிம்பிக் போட்டியில் 4-ஆவது இடம்
  • 2012 ஒலிம்பிக் போட்டியிலும் 4-ஆவது இடம்.
  • ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாமல் போனதை எண்ணி நொந்துபோன பெய்ட்டியா, விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • ஆனாலும் அவரது கனவு அவரைத் துரத்திக்கொண்டே இருந்தது.... மீண்டும் உயரம் தாண்டுதலில் பங்கேற்க வைத்தது.
  • 2013, 2014 ஆம் ஆண்டுகளில் கடினமாக உழைத்தார்.
  • 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பெய்ட்டியாவின் கடைசி வாய்ப்பு.
  • 37 வயதான பெய்ட்டியா போட்டியை முடிப்பதே கடினம் என்றனர் பலர்.

(படம்: REUTERS)

படம்: REUTERS

  • மனம்தளராமல் புன்னகையுடன் உயரத்தை தாண்டத் தொடங்கினார்.
  • கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்.... ஒலிம்பிக் போட்டியில் நினைத்தபடி தங்கம் வென்றார்.
  • 20 ஆண்டு உழைப்பு தங்கப்பதக்கமாக மாறியது.

"என்னால் முடியாது என்றார்கள். ஆனால் கடின உழைப்பு என்றால் என்ன என்று எனக்குத் தெரியும்."

என்று கூறிப் பலருக்கு ஊக்கமாக அமைந்தார் பெய்ட்டியா.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்;
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்