Images
  • saina nehwal (1)
    (கோப்புப் படம்: REUTERS/Athit Perawongmetha) 

பிரபல பூப்பந்து விளையாட்டாளர் சைனா நேவாலுக்குத் தாய்லந்தில் கிருமித்தொற்று

பிரபல இந்தியப் பூப்பந்து விளையாட்டாளர், சைனா நேவாலுக்குக் (Saina Nehwal) கிருமித்தொற்று இருப்பதாக உலகப் பூப்பந்துச் சம்மேளனம் (Badminton World Federation) தெரிவித்துள்ளது.

Yonex வெற்றியாளர் கிண்ணப் போட்டிகளுக்காக சைனா தாய்லந்து சென்றிருந்தார்.

போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், அந்தத் தகவல் வெளியானது.

விளையாட்டாளர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட மூன்று கட்டப் பரிசோதனைகள் செய்யப்பட்டபோது அது தெரியவந்தது.

BWF செய்திக்கு முன்னதாக, இந்திய பூப்பந்துச் சங்கம் (Badminton Association of India) தனது அதிகாரபூர்வ Twitter பக்கத்தில், சைனா நேவால், எச்.எஸ். பிராணோய் (HS Prannoy) ஆகியோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

தாய்லந்து சென்றிருக்கும் இந்தியப் பூப்பந்து அணியைச் சேர்ந்த அனைவரும் தங்கள் விடுதி அறைகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.  

Top