Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

FINA World Championships நீச்சல் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்கூலிங் தகுதிபெறவில்லை

FINA World Championships நீச்சல் போட்டியில், ஆடவருக்கான 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சிப் பாணி நீச்சலுக்கான அரையிறுதிச் சுற்றுக்குச் சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங் தகுதிபெறவில்லை.

வாசிப்புநேரம் -
FINA World Championships நீச்சல் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு ஸ்கூலிங் தகுதிபெறவில்லை

(படம்: REUTERS/Jeremy Lee)

FINA World Championships நீச்சல் போட்டியில், ஆடவருக்கான 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சிப் பாணி நீச்சலுக்கான அரையிறுதிச் சுற்றுக்குச் சிங்கப்பூரின் ஜோசஃப் ஸ்கூலிங் தகுதிபெறவில்லை.

தென் கொரியாவின் Gwangju நகரில் இன்று நடைபெற்ற போட்டியில், 7ஆவது இடத்தில் வந்தார் ஸ்கூலிங்.போட்டியை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 23 புள்ளி 7-3 விநாடிகள்.

போலந்தின் (கொன்ரெட் சர்னியெக்) Conrad Czerniack 23.63 விநாடிகளில் முதலாவதாக வந்தார்.

2017ஆம் ஆண்டு புடாபெஸ்ட்டில் நடந்த World Championships நீச்சல் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஜோசஃப் ஸ்கூலிங் ஆசியச் சாதனையை முறியடித்தார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட நேரம் 22.93 விநாடிகள். அதன் இறுதிச் சுற்றில் அவர் 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

சென்ற ஆண்டின் போட்டிகளில், ஆடவருக்கான 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சிப் பாணி நீச்சலில் வெண்கலம் வென்றார் ஸ்கூலிங். பின்னர் ஸ்கூலிங் இடம்பெற்ற குழு 4க்கு50 மீட்டர் அஞ்சல்-நீச்சலில் சிங்கப்பூருக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத்தந்தது.

அந்தப் போட்டிகளில் ஸ்கூலிங் இரண்டு தேசிய சாதனைகளை முறியடித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்