Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கிழக்காசியப் போட்டிகள் - சுவைத் தகவல்கள்

தென் கிழக்காசியப் போட்டிகள் ஈராண்டுக்கு ஒரு முறை நடக்கும் விளையாட்டுப் போட்டி.

வாசிப்புநேரம் -
தென் கிழக்காசியப் போட்டிகள் - சுவைத் தகவல்கள்

படம்: Jason

தென் கிழக்காசியப் போட்டிகள் ஈராண்டுக்கு ஒரு முறை நடக்கும் விளையாட்டுப் போட்டி.

இன்னும் இரண்டு நாள்களில் பிலிப்பீன்ஸில் 30ஆவது தென் கிழக்காசியப் போட்டிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கவிருக்கின்றன.

முதல்முறையாக 1959ஆம் ஆண்டு தென் கிழக்காசியப் போட்டிகள் 6 அணிகளுடன் தொடங்கப்பட்டது.

தற்போது 11 அணிகள் உள்ளன.

இந்தோனேசியா, மியன்மார், சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், தாய்லந்து, திமோர் லெஸ்ட்டே, லாவோஸ், மலேசியா, வியட்நாம், கம்போடியா, புருணை ஆகிய நாடுகள் போட்டிகளில் பங்குபெறுகின்றன.

இதுவரை 15 நகர்களில் தென் கிழக்காசியப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

திமோர் லெஸ்ட்டே, கம்போடியாவில் மட்டும் போட்டிகள் ஏற்று நடத்தப்படவில்லை.

தென் கிழக்காசியப் போட்டிகளில் அதிகப் பதக்கம் வென்ற நாடுகளில் 5,810 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது தாய்லந்து.

அது 2,162 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் இந்தோனேசியாவும், மூன்றாவது இடத்தில் மலேசியாவும் உள்ளன.

சிங்கப்பூர் 5ஆம் இடத்தில் உள்ளது, அது 3,144 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 894, தங்கப் பதக்கங்கள் ஆகும்.

போட்டிகளை Toggle வழியாகவும் பார்க்கலாம்...


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்