Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கிழக்காசியப் போட்டிகள்:100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தங்கம் வென்ற ஸ்கூலிங்

தென் கிழக்காசிய விளையாட்டின் ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங் தங்கத்தைக் கைப்பற்றினார்.

வாசிப்புநேரம் -

தென் கிழக்காசிய விளையாட்டின் ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங் தங்கத்தைக் கைப்பற்றினார்.

குழு உறுப்பினரான குவா செங் வென்னைப் (Quah Zheng Wen) பின்னுக்குத் தள்ளி அவர் தங்கம் வென்றார்.

நீச்சலில் சிங்கப்பூருக்கு 3ஆவது தங்கம் அது.

குவாவிற்கும் ஸ்கூலிங்கிற்கும் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவியது.

குவா முதல் இடத்திலும் ஸ்கூலிங் இரண்டாம் இடத்திலும் தகுதிபெற்றிருந்தனர்.

போட்டியில் முன்னணியில் தொடங்கினார் குவா.

அருகிலேயே இருந்த ஸ்கூலிங் கடைசி நேரத்தில் முன்னுக்குச் சென்றார்.

100 மீட்டர் தூரத்தை அவர் 51.84 விநாடிகளில் முடித்தார்.

0.03 விநாடி வித்தியாசத்தில் அவர் முதலிடத்தில் வந்தார்.

குவாவிற்கு இரண்டாம் இடம்.

அந்த முடிவுகளைத் தொடர்ந்து இரு நீச்சல் வீரர்களும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்னனர்.

ஆனால் 200 மீட்டர் மல்லாந்த நீச்சல் பாணியில் குவா தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

போட்டியை 2 நிமிடம், 0.06 விநாடியில் முடித்த குவா தனது சொந்தச் சாதனையை முறியடித்தார்.

தென்கிழக்காசிய நீச்சல் போட்டியில் இன்று மேலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியது சிங்கப்பூர் ஆண்கள் குழு.

4க்கு 100 மீட்டர் எதேச்சை பாணி அஞ்சல் நீச்சலில் ஸ்கூலிங், குவா, டேரன் லிம் (Darren Lim), டேனி இயோ (Danny Yeo) ஆகியோரைக் கொண்ட குழு தொடக்கத்திலிருந்தே முன்னணியில் இருந்தது.

3 நிமிடம், 16.82 விநாடிகளில் அது தங்கத்தை வென்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்