Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென்கிழக்காசிய விளையாட்டுகள் - நீச்சல் தேர்வுச் சுற்றில் சிங்கப்பூர் வீரர்கள் புதிய சாதனை

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் நீச்சல் வீரர்கள் இன்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசிய விளையாட்டுகள் - நீச்சல் தேர்வுச் சுற்றில் சிங்கப்பூர் வீரர்கள் புதிய சாதனை

(படம்: Ang Peng Wee/Matthew Mohan/ CNA)


தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் நீச்சல் வீரர்கள் இன்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

ஆண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் தேர்வுச் சுற்றில் தியொங் சன் வேயும் (Teong Tzen Wei) ஜொனதன் டான் இயு ஜின்னும் (Jonathan Tan Eu Jin) ஒரே நேரத்தில் போட்டியை முடித்தனர்.

அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட நேரம் 22.46 விநாடிகள்.

அது தேசிய அளவிலும், தென்கிழக்காசிய போட்டி அளவிலும் புதிய சாதனை. இன்று மாலை அவர்கள் இருவரும் இறுதிப் போட்டியில் பங்கேற்பர்.

பெண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் தேர்வுச் சுற்றில் குவா ஜிங் வன்னும் (Quah Jing Wen), குவா திங் வன்னும் (Quah Ting Wen) முதலிரண்டு இடங்களைப் பிடித்தனர்.

குவா சகோதரிகள் இருவரும் இன்று மாலை இறுதிப் போட்டியில் சந்திப்பர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்