Images
  • vettal
    (படம்: AFP/Roslan RAHMAN)

'எனக்கு நானே எதிரி' : Ferrariஇன் செபேஸ்டியன் வெட்டல்

ஃபெராரியின் (Ferrari) செபேஸ்டியன் வெட்டல் (Sebastian Vettel), இவ்வாண்டின் போட்டியில் தமக்குத் தாமே மிகப் பெரிய எதிரி என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பருவத்தில் பல தவறுகள் செய்தது குறித்து வெட்டல் அவ்வாறு கருத்துரைத்தார்.

மர்சடீஸ் குழுவைப் பிரதிநிதிக்கும் லூவிஸ் ஹெமில்ட்டனைவிட வெட்டல் 30 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.

முன்னணியைத் தக்கவைத்துக்கொள்வது தமக்கு மிகக் கடினமான ஒன்றாகவே இருக்கும் என்று நம்புதாக ஹெமில்ட்டன் கூறினார்.


கடந்த ஐந்து போட்டிகளில் மூன்றை அவர் வென்றுள்ளார். அடுத்த சில போட்டிகள் மிகக் கடினமாக இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாய்க் கூறினார் ஹெமில்ட்டன்.

வார இறுதியில் மரினா பேயின் கார்ப்பந்தயத் தடங்களில் நடக்கவிருக்கும் போட்டி குறித்து நம்பிக்கையோடு இருப்பதாக வெட்டலும் சொன்னார். 

Top