Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இந்த ஆண்டில் ஆக அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீராங்கனை யார் ?

உலகிலேயே ஆக அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைக்கான Forbes பட்டியலில், டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்த ஆண்டில் ஆக அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீராங்கனை யார் ?

(படம்: Photo: AFP/Paul Crock)

உலகிலேயே ஆக அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைக்கான Forbes பட்டியலில், டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து நாலாவது ஆண்டாக அவர் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த ஜூன் முதல்-தேதி முடிவடைந்த ஓராண்டு காலத்தில், அவர் சுமார் 29 மில்லியன் டாலர் ஈட்டியது தெரியவந்தது.

அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசுத் தொகையின் மதிப்பு, அதில் சுமார் 4 மில்லியன் டாலர்.

எஞ்சிய தொகை, சம்பளம், போனஸ், விளம்பரம் முதலியவற்றில் இருந்து கிடைத்தது.

பட்டியலில் அடுத்த நிலையில் ஜப்பானிய டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாகா.

அவரது ஓராண்டு வருமானம் 24 மில்லியன் டாலர்.

அடுத்த நிலையில், ஜெர்மானிய டென்னிஸ் நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பர் (Angelique Kerber) கடந்த ஓராண்டில் அவர் கிட்டத்திட்ட 11 மில்லியன் டாலர் ஈட்டினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்