Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: ஒலிம்பிக்சுக்குச் சென்ற முதல் சீருடற்பயிற்சியாளர்

ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: ஒலிம்பிக்சுக்குச் சென்ற முதல் சீருடற்பயிற்சியாளர்

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: ஒலிம்பிக்சுக்குச் சென்ற முதல் சீருடற்பயிற்சியாளர்

(படம்: Singapore Gymnastics)

ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற சிங்கப்பூரின் முதல் சீருடற்பயிற்சியாளர் (gymnast) யார் என்று தெரியுமா?

அவர் தான் லிம் ஹீம் வெய் (Lim Heem Wei).

அவர் 2012 லண்டன் (London) ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டார்.

போட்டியில் அவர் 45 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும், Uneven Bars நிகழ்வில் தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடினார்.

2001 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், அவர் 12 வயதில் பங்குபெற்றார்.

அதில் போட்டியிட்ட ஆக இளையவர்களில் அவரும் ஒருவர்.

ஒரு கலை சீருடற்பயிற்சியாளாரான அவர், 2005, 2007, 2011 தென்கிழக்காசிய விளையாட்டுகளில் (Southeast Asian Games) சிங்கப்பூருக்குத் தங்கப் பதக்கங்கள் வென்று தந்தார்.

அவர் 2010 காமன்வெல்த் (Commonwealth) விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

2014ஆம் ஆண்டில் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் Olympic Dreams Gymnastics எனும் சொந்த சீருடற்பயிற்சி பள்ளியை அமைத்தார்.

ஒலிம்பிக் விவரங்கள்:

லண்டன் 2012: அனைத்துப் பிரிவுகளும் (45ஆவது இடம்)

தகவல்: SNOC, Singapore Gymnastics

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்