Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று: சவுதி அரேபியாவிடம் சிங்கப்பூர் தோல்வி

உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று: சவுதி அரேபியாவிடம் சிங்கப்பூர் தோல்வி

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று: சவுதி அரேபியாவிடம் சிங்கப்பூர் தோல்வி

படம்: AFP

உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்று ஆட்டமொன்றில் சிங்கப்பூர் அணி சவுதி அரேபியாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

நேற்று ரியாத்தில் ஆட்டம் நடைபெற்றது.

முதல் பாதியில் கோலில்லை.

ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் சவுதி அரேபியா மூன்று கோல்களைப் புகுத்தியது.

உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச் சுற்றில் சிங்கப்பூர் அணி தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

மொத்தம் 12 கோல்களை அது வாங்கியுள்ளது. ஒரு கோல் கூடப் போடவில்லை.

கடந்த வாரம் பாலஸ்தீன வட்டாரத்திடம் 4-0, உஸ்பெக்கிஸ்தான் அணியிடம் 5-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் தோற்றது.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்