Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் இன்று

ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் இன்று

வாசிப்புநேரம் -

ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் இன்று...

*மேசைப்பந்து வீராங்கனை ஃபெங் தியான்வேய் (Feng Tianwei) இன்று ஒற்றையர் பிரிவில் போட்டியிடவிருக்கிறார்.

அந்த மூன்றாவது சுற்று ஆட்டத்தில், அவர் ஸ்பெயினின் மரியா சியாவைச் (Maria Xiao) சந்திக்கவிருக்கிறார்.

உலகத் தரவரிசையில் 12ஆவது நிலையில் இருக்கிறார், ஃபெங்.

சியாவ், பட்டியலில் அவரைவிட, சுமார் 60 நிலைகள் கீழே இருக்கிறார்.

ஆட்ட நேரம்: பிற்பகல் 3:30 மணி

*200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில், 24 வயது குவா செங் வென் (Quah Zheng Wen) இன்று போட்டியிடவிருக்கிறார்.

நேற்று, 100 மீட்டர் மல்லாந்த நீச்சலின் அரை இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற, குவா தவறினார்.

போட்டி நேரம்: மாலை 6: 20 மணி

*லோ கியன் யூ (Loh Kean Yew) பேட்மிண்ட்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடுகிறார்.

லோ, அகதிகள் ஒலிம்பிக் அணிக்கு விளையாடும் அராம் முகமதைச் சந்திக்கிறார்.

போட்டி நேரம்: இரவு 7 மணி

சிங்கப்பூர் அணியின் மேலும் சில விளையாட்டாளர்கள் இதர விளையாட்டுகளில் இன்று போட்டியிடுகின்றனர்.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்;

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்