Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டி: ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோர்  ஒலிம்பிக் போட்டி: ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர்

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டி: ஆண்கள் 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர்

படம்: Facebook/Team Singapore

தோக்கியோ உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் - ஆண்களுக்கான 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி S-7 நீச்சலின் இறுதிச்சுற்றுக்கு சிங்கப்பூரின் தோ வெய் சூங் (Toh Wei Soong) தகுதிபெற்றுள்ளார்.

தகுதிச் சுற்றில் இரண்டாம் நிலையில் வந்த அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் 29.90 விநாடிகள்.

முதல் இடத்தைக் கைப்பற்றிய அமெரிக்கர் எவன் ஆஸ்டின் (Evan Austin), 29.71 விநாடிகளில் போட்டியை முடித்தார்.

50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியின் இறுதிச்சுற்று சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை சுமார் 5 மணிக்கு இடம்பெறும்.

22 வயது தோ உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக்கில் முதன்முறை கலந்துகொள்கிறார்.

இன்று நீச்சலில் மொத்தம் 16 இறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்