Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி: ஆண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர்

உடற்குறையுள்ளோருக்கான தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் தோ வெய் சூங் (Toh Wei Soong) ஆண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி: ஆண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலின் இறுதிச் சுற்றில் சிங்கப்பூர்

(படம்: Sport Singapore)

உடற்குறையுள்ளோருக்கான தோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சிங்கப்பூரின் தோ வெய் சூங் (Toh Wei Soong) ஆண்கள் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

S7 பிரிவில் போட்டியிட்ட 22 வயது தோ, தகுதிச்சுற்றின் முடிவில் 8ஆவதாக வந்தார்.

அவர் 29.01 விநாடிகளில் நீந்திப் போட்டியை முடித்தார். அது தோ வின் சிறந்த நேரம், தேசிய சாதனையையும் அவர் சமன் செய்தார்.

இன்று மாலை சிங்கப்பூர் நேரப்படி 5:19 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாகக் களமிறங்கும் தோ, நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் எதேச்சை பாணிப் போட்டியின் இறுதிச்சுற்றில் 7ஆவதாக வந்தார்.

- CNA/ad(ac) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்