Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கார் பந்தயச் சாம்பியன் ஷூமாக்கரின் 50ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் F1

கார் பந்தயப் போட்டிகளின் முடிசூடா மன்னனாகக் கருதப்பட்ட மைக்கல் ஷூமாக்கரின் 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாட Formula One திட்டமிட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -

கார் பந்தயப் போட்டிகளின் முடிசூடா மன்னனாகக் கருதப்பட்ட மைக்கல் ஷூமாக்கரின் 50ஆவது பிறந்தநாளைக் கொண்டாட Formula One திட்டமிட்டிருக்கிறது.

கார்ப்பந்தயத்தில் தமது அசாதாரணத் திறமையைக் காட்டி மக்களின் மனத்தைக் கொள்ளையடித்த ஷூமாக்கர், 7 முறை
Formula One கிண்ணத்தை வென்றவர். மொத்தம் 91 பந்தயங்களையும் அவர் வென்றுள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் ஷூமாக்கர் பனிச்சறுக்கு விளையாடியபோது விபத்து ஏற்பட்டது. அதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு செயலிழந்த நிலைக்கு ஆளானார்.

ஃபெராரி கார் நிறுவனம் ஷூமாக்கரின் சாதனையைப் பாராட்டி இத்தாலியில் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

Formula One ஷூமாக்கரின் 50ஆவது பிறந்தநாளைக் கௌரவிக்கும் விதமாக அதன் சமூகவலைத் தளங்களிலும், இணையப்பக்கத்திலும் அவரின் சாதனைகளையும், வெற்றிகளையும் ஒரு வாரம் ஒளிபரப்பு செய்யத்திட்டமிட்டுள்ளது.

ஷூமாக்கர் இயல்புநிலைக்குத் திரும்பவேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்