Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் படகோட்டி

சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் படகோட்டி (rower) ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியை.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் முதல் ஒலிம்பிக் படகோட்டி (rower) ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியை.

சையிடா ஐஸ்யா (Saiyidah Aisyah), 2016 ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) ஒலிம்பிக்சில் ஒற்றைத் துடுப்பு (single sculls) நிகழ்வுக்குத் தகுதிபெற்று அந்தப் பெருமையைப் பெற்றார்.

அவர் 2016 ஒலிம்பிக்சில் காலிறுதிச் சுற்று வரை முன்னேறினார்.

இறுதியில் 32 போட்டியாளர்களில், அவர் 23ஆவது இடத்தைப் பிடித்தார்.

போட்டிகளுக்குத் தகுதிபெறுவதற்கு அவர் சிட்னியில் முழுநேரப் பயிற்சி பெறவேண்டியிருந்தது. அதற்காக அவர் தமது வேலையிலிருந்து விலகினார்.

Spex மானியத்தைப் பெறுவதற்கு முன்பு, அவர் தமது ஒலிம்பிக் கனவுகளை எட்டும் முயற்சிக்கு சொந்த நிதியைப் பயன்படுத்தினார். crowdfunding எனும் நிதித் திரட்டு முயற்சியின் மூலமும் பணம் திரட்டினார்.

சாயிடா ஆசிய, ஓஷெனியா (Oceania) ஒலிம்பிக் தகுதிப் போட்டியின் B இறுதிச்சுற்றில் வென்று, ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

ஒலிம்பிக் விவரங்கள்:

2016 ரியோ டி ஜெனிரோ - படகோட்டம் (காலிறுதி)

தகவல்: SNOC

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்