Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சிங்கப்பூர் பிரீமியர் லீக் ஆட்டத்தைக் காணப் பார்வையாளர்களுக்கு அனுமதி

சிங்கப்பூர் பிரீமியர் லீக்கில் (Premier League) தெம்பனில் ரோவர்ஸ் (Tampines Rovers) அணியும் கேலாங் இன்டர்நேஷனல் (Geylang International) அணியும் இந்த வார இறுதியில் பொருதவிருக்கும் ஆட்டத்துக்குப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

வாசிப்புநேரம் -

அதனைச் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் தெரிவித்தது.

மார்ச் மாதப் பிற்பாதிக்குப் பிறகு, சிங்கப்பூர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் பார்வையாளர்கள் அனுமதிப்படுவது இதுவே முதன்முறை.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு, சுகாதார அமைச்சு, Sport சிங்கப்பூர் அமைப்பு ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்குப் பிறகு அந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்கம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

தேவையான தளவாட ஆதரவையும் நடமாட்டச் செயல்முறைகளையும் முழுமையாக மதிப்பிட, முன்னோடித் திட்டமாக அந்த ஆட்டத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

அதிகபட்சமாக 200 பார்வையாளர்கள் வரும் சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் ஆட்டத்தை நேரடியாகக் காணலாம்.

கட்டாயக் கிருமித்தொற்றுச் சோதனைகளும் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளும் நடப்பில் இருக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்