Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கிழக்காசிய விளையாட்டுகள் - நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூருக்கு மேலும் 5 தங்கப் பதக்கங்கள்

நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூர் இன்று 5 தங்கப் பதக்கங்களைக் குவித்து, மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.

வாசிப்புநேரம் -
தென் கிழக்காசிய விளையாட்டுகள் - நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூருக்கு மேலும் 5 தங்கப் பதக்கங்கள்

படம்: SNOC

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூர் இன்று 5 தங்கப் பதக்கங்களைக் குவித்து, மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.

ஆண்கள் நான்குக்கு 100 மீட்டர் பலபாணி நீச்சலில் ஜோசப் ஸ்கூலிங்கைக் கொண்ட சிங்கப்பூர் அணி தங்கத்தை வென்றது.

அணி எடுத்துக்கொண்ட நேரம், 3 நிமிடம், 38.63 விநாடிகள்.

பெண்கள் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூர், தங்கம், வெள்ளி இரண்டையும் வென்றது.

குவா திங் வென் (Quah Ting Wen), 59.62 விநாடியில் முடித்து தங்கம் வென்றார்.

வெள்ளிப் பதக்கம் குவா ஜிங் வென்னுக்குச் சென்றது.

ஆண்கள் 50 மீட்டர் யதேச்சை பாணி நீச்சலிலும் சிங்கப்பூருக்குத் தங்கம், வெள்ளி.

22.25 விநாடியுடன், தென்கிழக்காசிய விளையாட்டுச் சாதனையை முறியடித்துத் தங்கம் வென்றார் ஜானத்தன் டான்.

வெள்ளியை வென்றார் சென் வெய் தியோங் (Tzen Wei Teong).

பெண்கள் 100 மீட்டர் நெஞ்சு நீச்சலில் சிங்கப்பூரின் கிரிஸ்ட்டீ மே முன் ஈ சியூ வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஆண்கள் 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் சிங்கப்பூருக்குத் தங்கம், வெண்கலம்.

1 நிமிடம், 56.61 விநாடியில் போட்டியை முடித்துத் தங்கம் வென்றார் குவா செங் வென் (Quah Zheng Wen).

ஜுங் யீ ஓங்கிற்கு வெண்கலம் .

பெண்கள் 800 மீட்டர் யதேச்சை பாணி நீச்சலில் சிங்கப்பூர் தங்கத்தைக் கைப்பற்றியது.

8 நிமிடம், 41.48 விநாடியில் முடித்து தங்கத்தை வென்றவர் சிங் ஹுவீ கான் (Ching Hwee Gan).


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்