Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

இங்கிலீஷ் பிரிமியர் லீக் : வெற்றி வாகை சூடிய மென்செஸ்ட்டர் சிட்டி

இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தின் இரண்டாவது நிலையில், லிவர்ப்பூல் தெரிவு செய்யப்பட்டது.

வாசிப்புநேரம் -
இங்கிலீஷ் பிரிமியர் லீக் : வெற்றி வாகை சூடிய மென்செஸ்ட்டர் சிட்டி

(படம்:Glyn KIRK/AFP)

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் இந்தப் பருவத்திற்கான காற்பந்து ஆட்டத்தில், மென்செஸ்ட்டர் சிட்டி அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

நேற்றிரவு, பிரைட்டன் அணியுடன் பொருதிய ஆட்டத்தில், அது நான்குக்கு ஒன்று என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

(படம்: AFP/Glyn Kirk)

38 ஆட்டங்களின் இறுதியில் அணிக்குக் கிடைத்த அந்த வெற்றி, மிகவும் கடுமையான போட்டிக்குப் பின்னர் கிடைத்திருப்பதாக, மென்செஸ்ட்டர் சிட்டி அணியின் நிர்வாகி பெப் கார்டியோலா (Pep Guardiola) கூறினார்.

இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தின் இரண்டாவது நிலையில், லிவர்ப்பூல் தெரிவு செய்யப்பட்டது. நேற்றிரவு, ஊல்வர்ஹாம்ட்டன் (Wolverhampton) அணியுடன் பொருதிய ஆட்டத்தில், அது இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்