Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் இங்கிலாந்துக் கொடியை அசைக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு எச்சரிக்கை

10,000திற்கும் மேற்பட்ட இங்கிலாந்து ரசிகர்கள் ரஷ்யா செல்லவிருப்பதால், அவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு  முடிவு எடுக்கப்படுவதாக அந்நாட்டுக் காவல்துறை அதிகாரி மார்க் ராபர்ட்ஸ் தெரிவித்தார்.

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின்போது இங்கிலாந்து ரசிகர்கள் நாட்டின் தேசியக் கொடியை அசைக்க வேண்டாம் என்று அந்நாட்டுக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடந்துவரும் அரசியல் பதற்றம் இதற்கு முக்கியக் காரணம்.

10,000திற்கும் மேற்பட்ட இங்கிலாந்து ரசிகர்கள் ரஷ்யா செல்லவிருப்பதால், அவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு  முடிவு எடுக்கப்படுவதாக அந்நாட்டுக் காவல்துறை அதிகாரி மார்க் ராபர்ட்ஸ் தெரிவித்தார்.

உலகக் கிண்ணப் போட்டிகளின்போது இங்கிலாந்து ரசிகர்கள் அந்நாட்டுக் கொடியைப் பொது இடங்களிலும் எடுத்துச் செல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டு மார்சே (Marseilles) நகரில் ரஷ்யாவைச் சேர்ந்த குண்டர் கும்பல் இங்கிலாந்து ரசிகர்களைத் தாக்கியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இங்கிலாந்து ஜூன் 18-ஆம் தேதி தனது முதல் போட்டியில் துனிசியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்