Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கோல் புகுந்தது! ஆனால் மூக்கு உடைந்தது ரூனிக்கு

மூக்கு உடைந்ததாகவும் அதற்கு ஐந்து தையல்கள் தேவைப்பட்டதாகவும் அவர் Twitterஇல் பதிவு செய்திருந்தார்.

வாசிப்புநேரம் -
கோல் புகுந்தது! ஆனால் மூக்கு உடைந்தது ரூனிக்கு

(படம்:AFP/Patrick McDermott)

இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் முன்னாள் அணித் தலைவர் வேன் ரூனி D.C. United குழுவுக்கான முதல் கோலைப் புகுத்தியுள்ளார்.

ஆனால் அந்த ஆட்டத்தில் அவரின் மூக்கு உடைந்தது.

மேஜர் லீக் காற்பந்தாட்டத்தில் DC Unitedஉம் Colorado Rapids அணியும் பொருதின.

32 வயது ரூனி ஆட்டத்தின் முதல் கோலைப் புகுத்தினார்.

ஆட்டத்தின் இறுதியில் எதிர்அணியின் தற்காப்பு ஆட்டக்காரர் ஏக்ஸல் ஸ்ஜோபர்க்கும் ரூனியும் மோதிக் கொண்டனர்.

அதில் ரூனியின் மூக்கில் காயமேற்பட்டது.

மூக்கு உடைந்ததாகவும் அதற்கு ஐந்து தையல்கள் தேவைப்பட்டதாகவும் அவர் Twitterஇல் பதிவு செய்திருந்தார்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்