Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணம் 2018 - நம்பிக்கை நட்சத்திரங்கள் - பாகம் 1

உலகக் கிண்ணம் என்றதும் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது தங்களுக்குப் பிடித்த அணிகளும் நட்சத்திரங்களும்தான்...

வாசிப்புநேரம் -

உலகக் கிண்ணம் என்றதும் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது தங்களுக்குப் பிடித்த அணிகளும் நட்சத்திரங்களும்தான்...

ஒவ்வோர் உலகக் கிண்ணம் முடிந்த பிறகும் சில விளையாட்டாளர்கள், ரசிகர்களின் மனங்களில் நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பர். அந்த விளையாட்டாளர்களைப் போன்று இந்த முறை சாதிக்கக் காத்திருக்கும் வீரர்களில் சிலரைப் பார்க்கப்போகிறோம். இன்று நால்வர்...

 முகமது சலா - எகிப்து

படம்: AFP

 தற்போது உலகக் காற்பந்தில் அதிகம் பேசப்பட்டு வருபவர் லிவர்ப்பூலின் முன்னிலை ஆட்டக்காரர் முகமது சலா.

 கடந்த பருவத்தில் லிவர்ப்பூல் சிறப்பாக ஆடியதற்கு முக்கியக் காரணம் சலா. எகிப்து அணியின் ஒரே உலகத்தரம் வாய்ந்த விளையாட்டாளர்.

 ஒரே ஆளாக எகிப்தைப் போட்டியில் சிறப்பாக ஆடவைப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்று. ஆனால் சலா இருப்பதால் ஓரளவுக்கு எந்த அணியையும் எதிர்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளது அணி.

 லிவர்ப்பூலுக்கு ஆடியதைப் போல் சலா எகிப்துக்கு ஆடமுடியுமா? என்று கேட்கலாம். அதற்கு விடை,லிவர்ப்பூலில் இருப்பது போன்ற தரமான விளையாட்டாளர்கள் எகிப்திடம் இருப்பது அவசியம்.

 அணியில் வேறு யாரையும் பற்றி ரசிகர்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவர்களின் ஆற்றலை இப்போது கணிக்கமுடியாது.

 நேமார் - பிரேசில்

படம்: AFP

 பிரேசிலிய முன்னிலை வீரர் நேமாருக்கு அறிமுகம் தேவையில்லை. உலகின் தலைசிறந்த விளையாட்டாளர் என்ற பெருமை கடந்த சில ஆண்டுகளாகக் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் லயனல் மெஸ்ஸிக்கும்தான் சென்றுகொண்டிருக்கிறது. அந்தப் போக்கை முறியடிக்கும் எண்ணம் கொண்டுள்ளார் நேமார். அதற்கு இந்த உலகக் கிண்ணத்தில் அவர் சிறப்பாக ஆடவேண்டும்.

 சலாவைப் போலின்றி நேமாரைச் சுற்றி மிகத் திறமையான ஆட்டக்காரர்கள். பிரேசில் சம்பா விளையாட்டில் மூழ்கினால் நேமார் உலகக் கிண்ணப் போட்டிகளை அதிரவைப்பது நிச்சயம்!

 கெவின் டி பிரோய்ன - பிரேசில்

படம்: AFP

 மென்செஸ்ட்டர் சிட்டியின் கெவின் டி பிரோய்னரை அதிகம் நம்பியிருக்கிறது பெல்ஜியம். மத்திய திடல்விளையாட்டாளரான இவர் கோல்களை உருவாக்கும் அழகு, தூரத்திலிருந்து கோல்களை அடிக்கும் விதம்... அபாரம்!

 

இங்கிலீஷ் பிரிமியர் லீக் பருவம் முழுவதும் மென்செஸ்ட்டர் சிட்டிக்கு அசத்திய டி பிரோய்ன,உலகக் கிண்ணத்திலும் பிரமாதமாக ஆடினால் பெல்ஜியம் சிறப்பாக மட்டும் ஆடாது, அணிக்குக் கோல்களும் குவியும்!

 டாவிட் டகேயா - ஸ்பெயின்

படம்: AFP

 தற்போது உலகின் ஆகச் சிறந்த கோல்காவலர் என்று கருதப்படுபவர் டாவிட் டகேயா. சற்றுக் களையிழந்து காணப்படும் ஸ்பெயினுக்கு டகேயா தெம்பூட்டுகிறார்.

இத்தாலியின் டினோ ஸொஃப், ஜெர்மனியின் செப் மாயர், இங்கிலாந்தின் கோர்டன் பேங்க்ஸ் போன்றோர் உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கோல்காவலர்கள்.

அதற்குப் பிறகு நீண்டகாலமாக உலகக் கிண்ணத்தில்,கோல்காவலர்கள் பெயர் பதிக்கவில்லை. அதை மாற்றக்கூடியவர் மென்செஸ்ட்டர் யுனைட்டடின் டாவிட் டகெயா!

 மேலும் சில வீரர்களை நாளை பார்ப்போம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்