Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

COVID-19 சம்பவங்கள் : சிங்கப்பூர் பிரீமியர் லீக் 2021 பருவம் நீட்டிப்பு

COVID-19 சம்பவங்கள் : சிங்கப்பூர் பிரீமியர் லீக் 2021 பருவம் நீட்டிப்பு

வாசிப்புநேரம் -

COVID-19 சம்பவங்கள் காரணமாக 2021 சிங்கப்பூர் பிரீமியர் லீக் காற்பந்துப் பருவம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், இரண்டு அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால்,
நடப்புப் பருவத்திற்கான கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 2 ஆம் தேதி இந்தப் பருவத்தின் இறுதிச்சுற்றை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது அக்டோபர் 10 ஆம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் காற்பந்துச் சம்மேளனமும் சிங்கப்பூர் பிரீமியர் லீக் அமைப்பும் அது பற்றிய தகவலை வெளியிட்டன.

காற்பந்துத் தொடரில் கலந்துகொள்ளும் அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கேலாங் இன்டர்நேஷனல் அணி ஆட்டக்காரர் ஒருவருக்கும் பேலஸ்டியர் கல்சா காற்பந்து அணி வீரர் ஒருவருக்கும் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

காற்பந்து அணியில் நோய்த்தொற்று ஏற்பட்டதால் அதில் உள்ள வீரர்கள் அனைவரும் 10 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

- CNA/ga(ac) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்