Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

விளையாட்டுத் துறையில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்கு முதலிடம்

விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்களின் பட்டியலில் காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
விளையாட்டுத் துறையில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்கு முதலிடம்

(படம்: AFP/Josep LAGO)

விளையாட்டுத் துறையில் கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்களின் பட்டியலில் காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அந்தப் பட்டியலை Forbes சஞ்சிகை நேற்று வெளியிட்டது.

மெஸ்ஸி விளம்பரம், விளையாட்டு ஒப்பந்தங்கள் மூலம் 127 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளார்.

இரண்டாவது இடத்தில் இருப்பவர் 109 மில்லியன் டாலர் ஈட்டிய காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

பிரேசில் காற்பந்து வீரர் நெமார் 105 மில்லியன் டாலர் ஈட்டி மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் (Roger Federer) 93.4 மில்லியன் டாலருடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் 29.2 மில்லியன் டாலருடன் 63ஆவது இடத்தில் இருக்கிறார்.

அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டாளர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரே பெண் விளையாட்டாளர் செரினா வில்லியம்ஸ்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்