Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

F1 கார்ப் பந்தயத்தில் 91-ஆவது வெற்றியைப் பெற்ற லூயிஸ் ஹாமில்டன்

ஜெர்மனியில் நடைபெற்ற Formula One கார் பந்தயத்தில், லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) வெற்றி பெற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -

ஜெர்மனியில் நடைபெற்ற Formula One கார் பந்தயத்தில், லூயிஸ் ஹாமில்டன் (Lewis Hamilton) வெற்றி பெற்றுள்ளார்.

Formula One கார்ப் பந்தயத்தில் அவர் பெற்றுள்ள 91-ஆவது வெற்றி அது.

Formula 1 கார்ப் பந்தயங்களின் மன்னன் என்று அழைக்கப்படும் மைக்கல் ஷூமாக்கர் (Michael Schumacher) பெற்ற வெற்றிகளுக்கு அது ஈடானது.

Mercedes ஓட்டுநர் ஹாமில்டனைத் தொடர்ந்து இரண்டாவது நிலையில் பந்தயத்தை முடிந்தார், Reb Bull ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen).

முன்றாவது நிலையில் வந்தார், Renault ஓட்டுநர் டேனியல் ரிக்கார்டோ (Daniel Ricciardo).

மைக்கல் ஷூமாக்கரின் 21 வயது மகன் மிக், தமது தந்தையின் சிவப்பு தலைக் கவசம் ஒன்றை ஹாமில்டனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

இந்தப் பருவத்தின் பட்டியலில் ஹாமில்டன் 230 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

COVID-19 நோய்த்தொற்று காரணமாக இவ்வாண்டின் F1 கார் பந்தயங்களில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

இந்தப் பருவத்தின் பெரும்பாலான பந்தயங்கள் பார்வையாளர்கள் இல்லாமலேயே நடத்தப்பட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்