Images
  • Sydney
    படம்: REUTERS 

ஆஸ்திரேலியா: கிருமித்தொற்றுச் சூழலுக்கு இடையிலும் சிட்னியில் கிரிக்கெட் போட்டிக்கு ஒப்புதல்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கிருமித்தொற்றுச் சூழலுக்கு இடையிலும் கிரிக்கெட் போட்டியை நடத்த, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில், சிட்னியின் Northern beach பகுதியில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்தன.

அதைத் தொடர்ந்து, சிட்னியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டன.

அதனால், அங்கு அடுத்த வாரம் ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியும் பொருதவிருந்த டெஸ்ட் போட்டி, திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று தற்போது ஆஸ்திரேலியக் கிரிக்கெட் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிட்னி நகரை உள்ளடக்கிய நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில், இன்று மேலும் 3 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.  

Top