Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலியப் பொதுவிருது இறுதியாட்டம் : சாதிப்பாரா நடால்?

ஆஸ்திரேலியப் பொதுவிருதின் ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச், இரண்டாம் இடத்தில் உள்ள ரஃபாயல் நடாலைச் சந்திக்கவுள்ளார்.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியப் பொதுவிருது இறுதியாட்டம் : சாதிப்பாரா நடால்?

(படம்: AFP)


ஆஸ்திரேலியப் பொதுவிருதின் ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோக்கோவிச், இரண்டாம் இடத்தில் உள்ள ரஃபாயல் நடாலைச் சந்திக்கவுள்ளார்.

சிங்கப்பூர் நேரப்படி இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் தொடங்கவிருக்கிறது.

இரு வீரர்களும் கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியின் இறுதியாட்டத்தில் மோதினர்; அதில் ஜோக்கோவிச் வென்றார்.

ஜோக்கோவிச் ஆஸ்திரேலியப் பொதுவிருதை இதுவரை ஆறுமுறை வென்றுள்ளார்.

இம்முறை விருதை வெல்ல நடால் அதிகம் போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஜோக்கோவிச்சை எளிதில் வெல்ல முடியாது என்று உலக ரசிகர்கள் பலர் நினைப்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமையலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்