Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

10 வயது....எடை 85 கிலோகிராம்.. சுமோ மல்யுத்த வெற்றியாளராக முனையும் சிறுவன்

10 வயது....எடை 85 கிலோகிராம்.

வாசிப்புநேரம் -

10 வயது....எடை 85 கிலோகிராம்.

ஜப்பானில் சுமோ மல்யுத்த வெற்றியாளர் எனும் இலக்கை அடைய தினமும் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஒரு சிறுவன்.

கியூட்டா குமாகாய் (Kyuta Kumagai) எனும் அந்தச் சிறுவன்,
மற்ற சிறுவர்களுடன் ஒப்பிடுகையில், உருவத்தில் இரு மடங்கு.

தன்னைவிட 5 அல்லது 6 வயது கூடுதலான வீரர்களுடன் போட்டியிட்டு வெல்கிறார்.

அதற்கு அவரது தந்தை உந்துகோலாகத் திகழ்கிறார்.

பாலர் பள்ளியில் படிக்கும்போதே சுமோ மல்யுத்தப் போட்டிக்கு அனுப்பினார் தந்தை.

அதிலிருந்து இடைவிடாத பயிற்சி.

தந்தை தைசுக்கேயின் (Taisuke) மேற்பார்வையில் வாரத்துக்கு 6 நாள் பயிற்சி.

சுமோ பயிற்சியில் இல்லாவிட்டால் எடை தூக்குகிறார் அல்லது நீந்துகிறார், திடல்திடப் பயிற்சியில் கூட ஈடுபடுகிறார்.

கியூட்டா தினமும் உட்கொள்ளும் உணவின் சராசரி கலோரி அளவு 2,700இலிருந்து 4 ஆயிரம் வரை.

அதில், 1 லிட்டர் பாலும் அதிகளவிலான புரதச்சத்தும் அடங்கும்.

தற்போது கியூட்டா, 10 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் உலக வெற்றியாளர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரிட்டன், உக்ரேன் (Ukraine) போன்ற நாடுகளின் போட்டியாளர்களை வீழ்த்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்