Images
  • osaka
    (கோப்புப் படம்: REUTERS/Mike Segar)

விளையாட்டில் இருந்து தற்காலிகமாக விலகிய டென்னிஸ் நட்சத்திரம் ஒசாக்காவிற்கு குவியும் ஆதரவு

டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாக்கா (Naomi Osaka) விளையாட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓய்வுபெற்ற டென்னிஸ் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் ஒசாக்காவின் முடிவை ஆதரித்துப் பேசியுள்ளனர்.

டென்னிஸ் பிரபலங்கள் பில்லி ஜீன் கிங், போரிஸ் பெக்கர், ஜேம்ஸ் பிளேக், ஒலிம்பிக் வெற்றியாளர் மைக்கல் ஜான்சன் ஆகியோர் ஒசாக்கா மீண்டுவர இந்த இடைவெளி உதவும் என்றனர்.

அமெரிக்கப் பொதுவிருது டென்னிஸ் தொடரில், ஒசாக்கா, மூன்றாவது சுற்றில் அதிர்ச்சியளிக்கும் வகையில், தோல்வி அடைந்தார்.

தோல்வியடைந்த ஒசாக்கா, கண்ணீர் விட்டு அழுதார். அதன் பின் டென்னிஸில் இருந்து தற்காலிகமாய் விலகுவதாக அறிவித்தார்.

விளையாட்டில் இருந்து ஒதுங்கி எப்படி மீண்டும் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வது என்பதற்கு இந்த இடைவெளி ஒசாக்காவிற்கு முக்கியம் என்றும் பிரபலங்கள் குறிப்பிட்டனர்.

-Reuters 

Top