Images
  • suzuki vietnam
    (படம்:VATSYAYANA/AFP)

Suzuki கிண்ணம் : 10 ஆண்டுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள வியட்நாம்

Suzuki கிண்ணக் காற்பந்து வரலாற்றில் பத்தாண்டுக்குப் பிறகு முதல்முறையாக வியட்நாம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நேற்று பிலிப்பீன்சுடன் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வியட்நாம் வென்றது.

ஹனோயில் நடந்த ஆட்டத்தை 40,000 ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

இறுதிச் சுற்றில் வியட்நாம் மலேசியாவைச் சந்திக்கும்.

வரும் 11ஆம் தேதி கோலாலம்பூரில் ஆட்டம் நடக்கவிருக்கிறது.
 

Top