Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மலேசியா வியட்நாமுக்கு இடையிலான சுஸுக்கி கிண்ணம் : பரபரப்பான விற்பனையில் நுழைவுச்சீட்டுகள்

தென்கிழக்காசியாவின் முக்கியக் காற்பந்துப் போட்டியாகக் கருதப்படும் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுள்ள ரசிகர்கள் பல ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

வாசிப்புநேரம் -
மலேசியா வியட்நாமுக்கு இடையிலான சுஸுக்கி கிண்ணம் : பரபரப்பான விற்பனையில் நுழைவுச்சீட்டுகள்

(படம்:AFP)

சுஸுக்கி கிண்ணக் காற்பந்தாட்டத்தின் இறுதிச் சுற்றில் மலேசியாவும் வியட்நாமும் பொருதவுள்ளன.

இன்று முதல் ஆட்டம் கோலாலம்பூரில் நடக்கவுள்ளது.

வரும் சனிக்கிழமை (15 டிசம்பர்) ஹனோயில் அடுத்தகட்டப் போட்டி இடம்பெறும்.

தென்கிழக்காசியாவின் முக்கியக் காற்பந்துப் போட்டியாகக் கருதப்படும் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வமுள்ள ரசிகர்கள் பல ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.

நுழைவுச்சீட்டுகளை வாங்க ஓர் இரவு முன்னரே கோலாலம்பூரின் புக்கிட் ஜலில் விளையாட்டரங்கில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர். 

இணையத்தில் விற்பனைக்குவந்த 40,000 சீட்டுகளும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

ஹனோய் சைய்கோன் நகரச் சாலைகள், மீண்டும் ஒருமுறை சிவப்பு வண்ணத்தில் மூழ்கவுள்ளன. 

இவ்வாண்டு ஜனவரி மாதம், 23 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய வெற்றியாளர் கிண்ண இறுதிப் போட்டிக்கு அப்போது வியட்நாம் தகுதி பெற்றிருந்தது. 

அதேபோன்ற நிலை இப்போதும் உருவாகியுள்ளதால், வியட்நாமும் மலேசியாவும் அதனதன் அணிகளுக்காகப் பெரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன. 

அரை இறுதிச் சுற்றுகளில் ரசிகர்களிடம் கிடைத்த மாபெரும் வரவேற்பு, தொடர்ந்து இறுதிச்சுற்றிலும் வெளிப்படும் எனக் கவனிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.        

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்