Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்குத் தயாராகும் சிங்கப்பூரின் நீச்சல் வீரர்கள்

சிங்கப்பூரின் நீச்சல் வீரர்கள், நாளை தொடங்கும் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்கு மும்முரமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்குத் தயாராகும் சிங்கப்பூரின் நீச்சல் வீரர்கள்

(படம்: REUTERS/Jeremy Lee)

சிங்கப்பூரின் நீச்சல் வீரர்கள், நாளை தொடங்கும் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்கு மும்முரமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

சிங்கப்பூரைப் பிரதிநிதித்து மொத்தம் 3 நீச்சல் வீரர்கள் போட்டியில் களம் காண்கின்றனர்.

2016 ரியோ போட்டிகளில் ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling) தமக்கு முன்னோடியாக விளங்கிய மைக்கல் ஃபெல்ப்ஸை (Michael Phelps) பின்னுக்குத் தள்ளி 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்.

இம்முறை அவர் அமெரிக்கர் கேலெப் டிரெஸ்ஸல் (Caeleb Dressel), ஹங்கேரியர் கிறிஸ்டோஃப் மிலக் (Kristof Milak) ஆகியோருடன் மோதவுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியிலும் ஸ்கூலிங் பங்கேற்பார்.

2016இல், அந்தப் போட்டியில் அவர் அரையிறுதி வரை சென்றார்.

நீச்சலில் சிங்கப்பூர் அணியைப் பிரதிநிதிக்கும் மற்ற இரண்டு பேர், குவா செங் வென்னும் (Quah Zheng Wen), அவருடைய மூத்த சகோதரி
டிங் வென்னும் (Ting Wen).

அவர்கள் இருவரும் மூன்றாம் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர். 

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்