Images
  • sWIMMING
    (படம்: பிரசன்னா)

பிரபல அமெரிக்க நீச்சல் வீரர்கள் சிங்கப்பூரில்!


கேலப் டிரெசல்(Caeleb Dressel), கேட்டி லெடெக்கி(Katie Ledecky), சிமோன் மெனுவல்(Simone Manuel) உள்ளிட்ட பிரபல அமெரிக்க நீச்சல் வீரர்கள் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.

வரும் வாரம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள FINA நீச்சல் உலகக் கிண்ணப் போட்டிக்காக அவர்கள் OCBC நீர் விளையாட்டு நிலையத்தில் பயிற்சிசெய்து வருகின்றனர்.

அமெரிக்க நீச்சல் வீரர்கள் அந்த நிலையத்தில் பயிற்சிசெய்வது இதுவே முதல் முறை.




"நிலையம் மிகவும் அழகாக உள்ளது. இப்படி அனைத்து விளையாட்டு வசதிகளும் ஒரே இடத்தில் இருப்பதை அமெரிக்காவில் பார்த்ததில்லை. நிலையம் மிகவும் சுத்தமாக உள்ளது, வியப்பைத் தருகிறது. மிகவும் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது."

- கேலப் டிரெசல், அமெரிக்க நீச்சல் வீரர்

ஒலிம்பிக் விளையாட்டுகளில் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார் சிமோன் மேனுவல்(Simone Manuel).




ஒலிம்பிக் விளையாட்டுகளின் நீச்சல் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் அமெரிக்கக் கறுப்பினப் பெண் அவர்.

"பொதுவாக தன்னைப் போன்ற மனப்போக்கு உள்ளவர்களிடம்தான் பலருக்கு ஈர்ப்பு வரும். அமெரிக்காவில் பொதுவாகக் கறுப்பினத்தவர்கள் நீச்சலில் ஈடுபடமாட்டார்கள். அதனால் எனக்கே சந்தேகம் வந்தது இது எனக்கான விளையாட்டுதானா என்று. பலர் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கின்றனர். அவர்களின் கருத்து தவறு என்று நிரூபிப்பதுதான் நான் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால். அந்தச் சவாலை முறியடிப்பது அவசியம். தனக்குப் பிடித்த விளையாட்டையோ மற்ற நடவடிக்கையையோ மேற்கொள்ளும்போது இதே சிக்கல் உள்ள பலருக்கு நான் ஊக்கமாக இருக்க விரும்புகிறேன்."

- சிமோன் மேனுவல், அமெரிக்க நீச்சல் வீராங்கனை.

வரும் வியாழக்கிழமை வரை சிங்கப்பூரில் இருப்பர் அமெரிக்க நீச்சல் வீரர்கள்.

Top