Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆக இளையப் போட்டியாளர், மேசைப்பந்துப் போட்டியின் முதல் சுற்றில் வெளியேறினார்

தோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆக இளையப் போட்டியாளர், மேசைப் பந்துப் போட்டியின் முதல் சுற்றில் வெளியேறினார்.

வாசிப்புநேரம் -

தோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆக இளையப் போட்டியாளர், மேசைப் பந்துப் போட்டியின் முதல் சுற்றில் வெளியேறினார்.

சிரியாவின் (Syria) 12 வயது ஹென் ஸாஸா (Hend Zaza), முதல் சுற்றில் ஆஸ்திரியாவின் லியூ ஜியாவைச் (Liu Jiaவைச்) சந்தித்தார்.

4-0 என்ற ஆட்டக்கணக்கில் லியூ ஜியாவிடம் தோற்றபோதும் ஸாஸா நிதானத்துடன் காணப்பட்டார்.

அடுத்த முறை இரண்டாவது, மூன்றாவது சுற்றுகளுக்கு முன்னேற மேலும் உழைக்கவிருப்பதாக அவர் சொன்னார்.

சிரியாவைப் பிரதிநிதித்து, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் மேசைப் பந்தாட்டக்காரர், ஸாஸா.

இதுவரை, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஆக இளையவரின் வயது 11.

ஸ்பெயினின் படகோட்டியான கார்லோஸ் ஃப்ரன்ட், 1992-ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொண்டார்.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்