Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென்கிழக்காசியப் போட்டி: சிங்கப்பூருக்கு மேசைப் பந்தில் 2 தங்கப் பதக்கங்கள்

பிலிப்பீன்ஸில் நடைபெறும் தென்கிழக்காசியப் போட்டிகளில், சிங்கப்பூருக்கு இன்று மேசைப் பந்தில் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியப் போட்டி: சிங்கப்பூருக்கு மேசைப் பந்தில் 2 தங்கப் பதக்கங்கள்

(படம்: SNOC)

பிலிப்பீன்ஸில் நடைபெறும் தென்கிழக்காசியப் போட்டிகளில், சிங்கப்பூருக்கு இன்று மேசைப் பந்தில் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பெண்கள் ஒற்றையர் போட்டியில், லின் யெ (Lin Ye) தங்கம் வென்றார். ஒலிம்பிக் வெற்றியாளரான ஃபங் தியென்வேய் (Feng Tianwei) வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

அது தவிர, ஆடவர் ஒற்றையர் மேசைப் பந்து இறுதிப் போட்டியிலும் சிங்கப்பூர் தங்கம் வென்றது.

சிங்கப்பூரின் கோன் பாங் (Koen Pang), சக நாட்டவரான கிலெரன்ஸ் சூவை (Clarence Chew) நேர் செட்களில் தோற்கடித்துத் தங்கம் வென்றார்.

பதினெட்டு வயதுக்குக் கீழ்ப்பட்ட போட்டியாளர்களிடையே உலகின் முதல்தர வீரர் பாங்.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து, தென்கிழக்காசியப் போட்டியின் ஒற்றையர் மேசைப் பந்துப் போட்டி வெற்றியாளர் பட்டத்தைப் பெறும் முதல் விளையாட்டாளர் அவர்தான்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்